(இ.சுதா)
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட சதுஃறாணமடு இந்து மகாவித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர்
கே.தியாகராஜா தலைமையில் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிகமாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஸீம் அதிவிசேட அதிதியாகவும்.
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி , நாவிதன்வெளி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து ஆகியோர் விசேட அதிதிகளாகவும்.
கௌரவ அதிதிகளாக உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்தவ்அலி, ஓய்வுநிலைகணிதபாடஉதவிக்கல்விப் பணிப்பாளர் பிரமானந்தாமற்றும் பாடசாலையின் ஓய்வுநிலை முன்னாள் அதிபர் எஸ்.மார்க்கண்டு, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கே.எம்.எஸ்.நயாஸ் ஓய்வுநிலை உடற்கல்வி ஆசிரியர் எஸ்.அரசரெத்தினம் உட்பட நாவிதன்வெளி கோட்டபாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் இமாணவர்கள் இபாதுகாவலர்கள் , பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் இபாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் , நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போதுபாடசாலை இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுநிகழ்வில் மாணவர்களின் அணிநடைமற்றும் உடற்பயிற்சி விநோத உடைப் போட்டி பழையமாணவர் கழகங்களுக்கிடையிலான அஞ்சல் ஓட்டப் போட்டி மாற்றுத்திறனுடைய பாணவர்களுக்கிடையிலான பலுன் ஊதி உடைத்தல் போட்டி என்பனநடைபெற்றன.
இல்லங்களின் தரப்படுத்தலில் 458 புள்ளியினைப் பெற்று பாண்டியன் இல்லம் முதலாம் இடத்தினையும். 442 புள்ளியினைப் பெற்று சேரன் இல்லம் இரண்டாம் இடத்தினையும், 397 புள்ளியினைப் பெற்று சோழன் இல்லம் மூன்றாம் இடத்தினையும் தட்டிக் கொண்டமை குறிப்பிடதக்கது.
0 Comments:
Post a Comment