22 Feb 2017

திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்விக்காக மட்டக்களப்பு விமானப்படையினர் ஒரு மில்லியன் ரூபா செலவில் கட்டிட நிர்மாணம்

SHARE
மட்டக்களப்பு, இலங்கை   விமானப்படையினரால் 01 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடங்கள் செவ்வாய்கிழமை (21.02.2017) திறக்கப்பட்டு
பாடசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய வசதிகள் இல்லை எனும் குறைபாட்டை கருத்திற்கொணடு அப்பாடசாலை கட்டிடத் தொகுதியினையும் வளாகத்தினையும் மட்டக்களப்பு விமானப்படையினர் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட செலவில் புனரமைப்புச் செய்து வழங்கியுள்ளனர்.

இலங்கை   விமானப்படையின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், மட்டக்களப்பு  விமானப்படைக் கட்டளைத் தளபதி புத்திக பியசிறி, மட்டக்களப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சுகுமார்,  உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் பேசுகையில்,
மக்கள் தங்கள் இடங்களிலே மீளக் குடியேறவேண்டும் அவர்கள் தங்கள் பகுதிகளில் சமாதானமாக வாழவேண்டும் இந்த விடயத்தைத்தான்  நாங்கள் தினமும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்.

அந்தவகையில் மட்டக்களப்பில் விமானப் படையினர் தங்களது எல்லைகளிலிருந்து வெளியேறி மக்களுடன் இணைந்து மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து அபிவிருத்தியினையும் சேவையினை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த கால அசாதாரண சூழலில் நாங்கள் எப்படி பிரிந்து வாழ்வது எப்பதைத்தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் மட்டக்களப்பு விமானப்படையின் இச் செயற்பாட்டின் ஊடாக  நாம் எப்படி சேர்ந்து வாழ்வது என்பதை கற்றிருக்கின்றோம். எனத் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: