22 Feb 2017

தொடர் பயிற்சி நிலையானவெற்றிக்கு உறுதுணையாக அமையும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன்.

SHARE
(இ.சுதா)


இலங்கையில் தற்போது கல்வி கற்றபடித்த நோயாளிகள் தினமும் உருவாகின்றனர். தரவுகளின் அடிப்படையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினாலும் 35 வீதமானோர் தொற்றா
நோய்களினாலும் மரணத்தினைஎதிர் கொள்கின்றனர். காரணம் முறையான உடற்பயிற்சி இல்லாமை பிரதானகாரணமாகும். 

இவ்வாறு கடந்த சனிக்கிழமை (18)  மத்தியமுகாம் றாணமடு இந்து மாகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுகருத்துத் தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 


தினமும் தமது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் எமது நாட்டினை பொறுத்தளவில் மிகக் குறைவாகும். ஒவ்வொருமனிதனும் தமது உடல் ஆரோக்கியத்தில் கரிசனைகாட்டுபவர்களாயின் நோயின்றி வாழமுடியும். அதற்கு ஏற்றவகையில் எம்மைநாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.


இடைவிடாத தொடர்ச்சியான பயிற்சி மூலமாக மனிதனால் சாதிக்கமுடியாதது ஒன்றுமே இல்லை ஒரு இலக்கினை அடைவது இலகுவான காரியமல்ல பலதடைகளை எதிர் கொண்டு அதற்கு ஏற்றவகையில் தொடர் முயற்சி மாத்திரமல்லாது அதனோடு இணைந்த உத்வேகம் நிலையான இலக்கினை அடைவதற்கான அடையாளமாகும்.

இப் பாடசாலைமாணவர்கள் சாதித்தவிடயம் பலவாக காணப்படுகின்ற அகில இலங்கைரீதியாக நடைபெற்ற தமிழ்த் தினப் இலக்கணப் போட்டியில் இப்பாடசாலை மாணவி முதலாம் இடம் பெற்றிருக்கின்றமை வலயத்திற்கு மாத்திமன்றி பிரதேசத்திற்கும் பெருமைதரக் கூடியவிடயமாகும். குறித்த மாணவி இம்முறைநடைபெற்ற க.பொ.தசாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெறவுள்ளதாக அறிந்தேன் உண்மையில் மாகாணகல்வித் திணைக்கத்தின் சார்பாக பாராட்டுகின்றேன்.

வடமாகாணம் தேசியரீதியாக நடைபெறுகின்ற பல போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை பெறுகின்றன. ஆனால் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தளவில் விளையாட்டில் பட்டிருப்பு கல்விவலயமானது சேப்படுகின்றது. களுதாவளை மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவர் ஒருவர் தேசியரீதியாக தங்கப் பதக்கங்களை பெற்று வலயத்திற்குமாத்திமல்லாது மாகாணத்திற்கும் பெருமையினை ஏற்படுத்தியுள்ளார்.  மாணவனின் தந்தை உடற்கல்வி ஆசிரியர் என்ற வகையில் தனது மகனுக்கு கொகுக்கப்பட்ட தொடர் பயிற்சி இன்று தந்தைபுகழ் கூறுமளவிற்குஉயர்ந்துள்ளது.

றாணமடு இந்து மகாவித்தியாலயமானது வளப்பற்றாக் குறைகளுக்கு மத்தியிலும் தடைகளைதகத் தெறிந்து முன்னேற்றம் கண்டுள்ள இப்பாடசாலையின் வளர்ச்சியில் மாகாணக் கல்வித் திணைக்களம் இணைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. தற்போது இணைப்பாட விதானச் செயற்பாடுகள் பாடவிதானத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன் புறக்கிருத்திய செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

வித்தியாலயத்திலுள்ள குறைகளை அதிபர் சுருக்கமாக குறிப்பிட்டிருந்தார் மிகவிரைவாக நடனஆசிரியர் மற்றும் இரண்டாம் மொழிசிங்களம் கற்பிப்பதற்காக ஆசிரியர் மற்றும் இணைந் தகணிதம் கற்பிப்பதற்காக ஆசிரியர்களை நியமிப்பதற்கு மாகாணகல்வி திணைக்களம் சார்பாக நடவடிக்கையினை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: