இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், கலாநிதி மு.இராசேந்திரம் பீடாதிபதி கலைகலாசார பீடம் கிழக்கு பல்கலைக் கழகம், கலாநிதி.எஸ்.அரசரெத்தினம் சிரேஸ்ர விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக் கழகம், கௌரவ அதிதிகளாக கலாநிதி எம்.கோபாலரெத்தினம் பிரதேச செயலாளர், திரு.ரீ.பொன்னம்பலம் ஒய்வு நிலை கல்விச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது தரம் ஐந்து புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த 202 மாணவர்களும், க.பொ.த.சா.தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த .உயர்தரப்பிரிவில் கலை,வர்த்தகம், விஞ்ஞானம்,கணிதம் போன்ற துறைகளில் சித்தியடைந்த மாணவர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டுப் போட்டி, தமிழ்த் தினப்போட்டி, ஆங்கில மொழித்தினப் போட்டி.சமூகவிஞ்ஞானப்போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு மகாண,தேசிய ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்கள், சாதனைக்கு ஊக்கிவித்த ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசார ஊழியர்கள் என பல இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்/
0 Comments:
Post a Comment