இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் விடயத்தில் அக்கறை கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதாக இருந்தால், அதற்கு முன்னர் இனவாதிகள் சிலரை நாடுகடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்
சுமார் 30 வருடகாலம் புணரமைப்பு செய்யப்படமால் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கிராமக்கோட்டு வீதியின் புனரமைப்பு வேலையின் ஆரம்ப நிகழ்வு முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வாமதேவன் தலையில் நடைபெற்றது இதில் உள்ளுராட்சி உதவி அணையாளர் சித்திரவேல் பிரதேச சபையின் செயலாளர் குபேரன் ஆகியோர் கலந்து கொண்ணடனர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மட்டக்களப்பு விகாராதிபதி, சம்பிக்கரணவக்க, விமல்வீரவம்ச, பொதுபலசேனா, போன்ற இனவாதிகளை இந்த நாட்டிலே இருந்து நாடுகடத்த வேண்டும். இல்லாதவிடத்து அவர்களின் இனவாத நடவடிக்கைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புத்த சமயமானது சிங்கள இனத்தவருக்கோ அல்லது பௌத்த இனத்திற்கோ உரியதல்ல பௌத்த மதத்தின் ஆரம்ப கத்தா இந்து மதத்தினைச் சேர்ந்த சித்தாத்தன் என்பதையும் நினைவுபடுத்தி புத்த சமயம் தமிழருக்கும் சொந்தமான மதம் என்னபதை கூறிவைக்க விரும்புகின்றேன்,
ஒரு பௌத்த மதகுரு அவர்கள் உரையாற்றி இருந்தார் தமிழர்கள் கட்டு மரத்தில் வந்தவர்கள் என்று அவருக்கு ஒன்று கூறவிரும்புகின்றேன் இந்த நாட்டின் ஆதிக் குடிமக்களான விஜயனும் எழுநூறு தோழர்களும் நவீன கப்பலிலா வந்தார்கள் கட்டு மரத்தில்தான் வந்தார்கள் எனவே யார் கட்டுமரத்தில் வந்தவர்கள் என்ற வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.
இந்த நாட்டின் ஜனாதிபதி மிகவும் நல்ல எண்ணத்தில் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். அண்மையில் ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டு கொண்டு இருக்கின்றார். என்பதற்கு அண்மையில் அவர் வெளியிட்ட கருத்தில் இருந்து தெரியவருகின்றது. அதாவது தமிழ் மக்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் வாழந்து வருகின்றார்கள் என்ற உண்மையான கருத்தினை உணர்ந்து கொண்டு வெளியிட்டிருந்தார்.
எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் ஏனைய தலைவர்களை விடவும் தற்போதைய ஜனாதிபதி அவர்களின் நடவடிக்கை மீது எமக்கு ஓரளவு நம்பிக்கையுண்டு இதனையே எமது தலைவர் சம்மந்தன் ஐயா அவர்களும் கூறியிருக்கின்றார். எமது பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் காலம் கனிந்திருப்பதாகவும் நான் அறிகின்றேன் எனவே எமது மகக்ளின் அபிலாசைகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அந்துடன் இந்த நலலாட்சி அரசாங்கத்தை குழப்புவதற்கு பொளத்த மதகுருமார் மேற் கொள்ளுகின்ற அட்டூழியங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment