மலேசிய நிறுவனத்துடன் கிழக்கில் தொழில் வாய்ப்புக்கு முதலீடு செய்யும் ஒப்பந்தம் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மலேசிய அமானா நிறுவனப் பிரமுகர்களுடனான கைச்சாத்து புதன்கிழமை (14.12.2016) இடம்பெற்றது.
மலேசிய அமானா பௌண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் மௌலானா மௌலவி அப்துல் காதிர் அஸ்கரி தலைமையிலான குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கிழக்கில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டது.
மலாய் மொழிச் சமூகத்துக்கு பாரிய சமூக சேவைகளைச் செய்துவரும் மேற்படி அமானா நிறுவனம் இலங்கை கிழக்கு மாகாண மக்களுக்கும் உதவும் பொருட்டு பாரிய உதவிகள் வழங்குதல் தனியார் துறைகளில் முதலீடு செய்து வேலை வாய்ப்புக்கள் வழங்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.


0 Comments:
Post a Comment