14 Dec 2016

அமெரிக்கா மற்றும் பலஸ்தீன் தூதரகங்களுக்கு கடமையேற்கச் செல்லும் அதிகாரிகளுக்குப் பாராட்டும் பிரியாவிடையும்

SHARE
அமெரிக்கா மற்றும் பலஸ்தீன் தூதரகங்களுக்கு கடமையேற்கச் செல்லும் ஏறாவூரைச் சேர்ந்த அதிகாரிகளுக்குப் பாராட்டும் பிரியாவிடையும் அளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (14.12.2016) ஏறாவூரில் இடம்பெற்றது.
ஏறாவூர் ஷெட்; (SHED நிறுவன அலுவலகத்தில் அதன் தலைவர் கே. அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்அமெரிக்கா நியூயோர்க்கிலுள்ள இலங்கைத்  தூதராலயத்திற்கு பொதுத் தொடர்பு முகாமைத்துவ அதிகாரியாக பணியாற்றச் செல்லும் ஏறாவூரைச் சேர்ந்த எஸ். அப்துல் றஷீத் மற்றும் பலஸ்தீனத்திலுள்ள இலங்கைத் தூதராலயத்தில் துணைத் தூதராக கடமைப் பொறுப்பேற்கவிருக்கும் ஏ.டபிள்யூ.எம். பௌஸ் ஆகியோர் பிரியாவிடையளிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.டபிள்யூ.எம். பௌஸ் பலஸ்தீனத்திலுள்ள இலங்கைத் தூதராலயத்தில் துணைத் தூதராக வெள்ளிக்கிழமை (16.12.2016) கடமைப் பொறுப்பேற்கின்றார்.
இதேவேளை, எஸ். அப்துல் றஷீத் அமெரிக்கா நியூயோர்க்கிலுள்ள இலங்கைத்  தூதராலயத்தில் பொதுத் தொடர்பு முகாமைத்துவ அதிகாரியாக எதிர்வரும் 2017 ஜனவரி முதல் கடமைப் பொறுப்பேற்கின்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: