9 Nov 2016

மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு எங்கள் திட்டங்களை அனுதியளிக்கின்ற பதவியில் மக்கள் பிரதிநிதி அல்லாவர் அமர்த்தப்பட்டிருப்பதானது எந்த வித்தல் நியாயம் - கி.மா.உ நடராசா கேள்வி.

SHARE
பட்டிருப்புத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாங்கள் 3 பேர் மாத்திரமே மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றோம். இவ்வாறு இருந்தும் கூட நல்லாட்சி என்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நல்லட்சிக்கு எதிராகச் செயற்பட்டு மகிந்த ராஜபக்ஸவை ஆதரித்துநின்ற ஒரு அரசியல்வாதிக்கு, போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவிற்கு இணைத் தலைமைப் பதவி வழங்கி அமர்த்தப்பட்டுள்ளார்.
இவர் எமது மக்களின் அபிவருத்தியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இதன் காரணத்தினால்தான் நான் எனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமராமல் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தே இக்கூட்டத்தில் பங்கேற்றேன்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

திங்கட் கிழமை (07)  மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருதை தந்திருந்த மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அவருக்காக ஒதுக்கீடு செய்திருந்த ஆசனத்தில் அமராமல் மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தவாறு இக்கூட்டத்தில் பங்கேற்றார். இவ்விடையம் தொடர்பில் கூட்டம் முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

மக்கள் பிரதிநிதிகள் பங்கு பற்றும் இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதி அல்லாதவரை ஜனாதிபதி அவர்கள் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமித்திருக்கின்றார். அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி நாங்களெல்லாம் இந்த நல்லாட்சியைக் கொண்டு வருவதங்குக் கஸ்ற்றப்பட்டோம், மக்களை அணிதிரட்டி வாக்களிக்க வைத்தோம், ஆனால் மகிந்த ராஜபக்ஸவுடன் இருந்து நல்லாட்சிக்கு தடையாகவிருந்த ஒருவரை அபிவிருத்திக்கு தலைமை தாங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கொள்கைகளற்றவர்கள், அங்குமிங்கும் மாறித்திரிகின்றவர்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் செல்லமுடியாது. இருந்த போதிலும் மக்களின் குறைபாடுகளை அவ்வாறான கூட்டங்களில் கூறவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. ஆகவே மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு எங்கள் திட்டங்களை அனுதியளிக்கின்ற பதவியில் மக்கள் பிரதிநிதி அல்லாவர் அமர்த்தப்பட்டிருப்பதானது எந்த வித்தல் நியாயம்.

இதைப்பற்றி நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை, இதில் விருப்பம் கொண்டவர்களுமல்ல, இருப்பினும் இந்த கிழக்கு மாகாண நல்லட்சி அதிகாரதில் ஒரு பங்காளிகளாக இருக்கின்றோம், பட்டிருப்புத் தொகுதியிலுள்ள 3 மக்கள் பிரதிநிதிகளும் தற்போது பறக்கணிக்கப் பட்டுள்ளோம். எங்கள் மக்களின் அபிவிருதிகளைத் திட்டமிடுவதற்கு எமக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. ஆனால் தேர்தலுக்காக இறக்கப்பட்டவர்கள் அவர்களை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் இந்த அபிவிருத்திக் குழுவில் அங்கம் பெறுகின்றார்கள். ததிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசியலில் நல்லாட்சிக்கு ஆதரவுவழங்கின்றதே தவிர பங்காதளிகளாக இருக்கவில்லை எமது தலைவர்களும் எதிர்க் கட்சியிலிருந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் இவ்வாறான நியமனங்கள் தொடர்பில் மக்கள் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றார்கள் எங்களுக்கு அதனை ஜீரணிக்க முடியாதுள்ளது. என அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை அண்மையில் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பக் குழுக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி நியமித்ருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: