மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரையோரப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமெனக் கருதப்படும் ஒருதொகுதி வெடிபொருட்கள் மைலம்பாவெளி முகாம் விஷேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.
சவுக்கடி பகுதியில் மரமுந்திரிகைத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது உரப்பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் 4 கைக்குண்டுகள் 2 வெற்று மகசீன்கள், ரீ-56 ரக துப்பாக்கி ரவைகள் 4, சயனட் குப்பி ஒன்று மற்றும் அடையாளத் தகடு என்பனவும் கண்டெடுக்கப்பட்டன.
இவ்வெடி பொருட்கள் யுத்தம் இடம்பெற்றபோது விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என விஷேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டன.
0 Comments:
Post a Comment