9 Nov 2016

வாதப் பிரதிவாதங்களுடன் நடந்தேறிய போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் திங்கட் கிழமை (07) நடைபெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்
இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், உத்தியோகஸ்தர்கள், கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பனர்களும், பிரசன்னமாகியிருக்கிவல்லை, மேலும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதில் கலந்து கொண்டிருக்கவில்லை. இதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராச அவருக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமராமல் மக்களுக்காக ஒதுக்கீடு செய்திருந்த ஆசனத்தில் அமர்ந்தவாறு இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 43 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 47 திட்டங்கள் முன்மொமியப்பட்டுள்ளன,

மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டம் 75 வீதம், பூர்தியாக்கப்பட்டுள்ளன.
சுரவணையடியூற்றுக் கிராமத்திற்கு தொண்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டு வந்த குடிநீர் திட்டத்தை விடுத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திட்டத்தின் கீழ் உள்வாங்கி அக்கிராமத்திற்கு குழாய்மூலம் குடிநீரை வழங்குதல், இப்பிரதேசத்தில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படாமல் விடுபட்டுள்ள கிராமங்களுக்கு தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை மூலம் குழாய் மூல நீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், இவ்வருடத்திற்குள் 326 விண்ணப்பதாரர்களுக்கு மின்சாரம் வழங்குதல், எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் 10 கிலோ மீற்றர் நீளம் கொண்ட யானைப் பாதுகாப்பு மின்சார வேலிகளை அமைத்தல், அடுத்த வருட இருதிக்குள் இப்பிரதேசத்திலுள்ள யானை வரும் அனைத்து இடங்களிலும் மின்சார வேலைகளை நடுதல், கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை 212 வீடுகள் இப்பிரேசத்தில் யாட்டு யானைகளினால் உடைக்கப்பட்டுள்ளன.

48000 மாடுகள் உள்ள இப்பிரதேசத்தில் 10000 மாடுகளுக்கு மாத்திரம் வழங்கக் கூடிய மருந்துகள் உள்ளன இவற்றுக்கு நடவடிக்கை எடுத்தல், அதிபர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

மேலும், நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை, கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி, வீதி அபிவிருத்தி, மின்சாரம், குடிநீர், மீன்பிடி, வனபரிபாலனம், வனஜீவராசிகள், போக்குவரத்து,  போன்ற பல விடையங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.













SHARE

Author: verified_user

0 Comments: