15 Nov 2016

பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தைப் பூட்டி சிவில் அமைப்பு வீதியை மறித்து ஆர்ப்பட்டம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதான வீதிi மறித்து செவ்வாய் கிழமை (15) பட்டிப்பளை பிரதேச சிவில் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச

சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், சா.வியாளேந்திரன், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம். மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, கோ.கருணாகரம், இ.பிரசன்னா, இரா.துரைரெத்தினம்,  மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், மற்றும் பொன்.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (11) பட்டிப்பளைக் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பாறை கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்ர் மங்களராமய விகாராதிபாதி அம்பிட்டிய சுமணரெததின தேரர் அப்பகுதி பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகஸ்தர் உள்ளிட்ட அரச அதிகாரிகைள தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து திட்டியமை, தமிழர்க்ள அனைவரும் புலிகள், தமிழ் மக்கள் 50 வருடங்களுக்கு மேலாக பாவித்து வரும் மேச்சல்தரைப் பகுதியை சிங்கள மக்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும்  என்ற கோரிக்கைகளை முன்சைத்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருந்தார் இச்வம்பவத்தைக் கண்ண்டித்தே பட்டிக்களைப் பிரதேசசெயலகத்தின் வாயிற் கதவினைப் பூட்டி ஆர்ப்பதாட்த்தில் ஈடுபட்டனர்.

இதனால் சில மணி நேரம் பட்டிப்பளை  - கொக்கட்டிச்சோலை பிரதான வீதியின் போக்கு வரத் துண்டிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் இக்குறித்த இடத்;தில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன். ஆகியோர் வருகை தந்திந்தர்.

குறித்த புத்த பிக்குவைக் கைது செய்ய வேண்டும், மாவட்டத்திலிருந்து அந்த புத்த பிக்குவை வெளியேற்ற வேண்டும், அரச அதிகாரிகளுக்கு நீதியான விசாரணை வேண்டும், விசாரணையை அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பக்கு மாற்ற வேண்டும், இவ்லையேல் இவ்விடத்தை விட்டு நாம் அபலப் போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

விசாரணைகள், துரிதப்படுத்தப்படும், குறித்த விடையம் தொடர்பான விசாரணை ம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்நிலையில் அதனை ம்டக்கள்பு மாவட்டத்திற்கு மாற்றப்படும், என்ற கோரிக்கை உறுதி மொழியை மேலதிக அரசாங்க அதிபரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் வழங்கியதை யடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பொலிமா அதிபர், ஜனாதிபதி, பிரதமர், ஆகியோருக்கும் இ;விடையம் தொடர்பில் விசாரணைகயைத் தரிதப்படுத்துமதறு அடங்கிய மகஜர்களும், உதவிப் பொலிஸ் அத்தியட்சரிடமும் கையளிக்கப்பட்டன.




















SHARE

Author: verified_user

0 Comments: