15 Nov 2016

புத்த பிக்குவை கைது செய்ய வேண்டும் இல்லையேல் இதுபோன்ற போராட்டங்கள் மாவட்டம் பூராகவும் வெடிக்கும்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியை மறித்து செவ்வாய் கிழமை (15) பட்டிப்பளை பிரதேச சிவில் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் சிவில் அமைப்புக்ளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 
இதன்போது மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின்ர் தெரிவித்த கருத்துக்கள்…..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை 
(புத்த பிக்குவை கைது செய்ய வேண்டும் இல்லையேல் இதுபோன்ற போராட்டங்கள் மாவட்டம் பூராகவும் வெடிக்கும்.)

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரரின் செயற்பாடுகளும். அட்டகாசங்களும் பல வருட காலமாக தொடர்கின்றது. அவர் மத குருவாகச் செயற்படாமல் ஏனைய இன மக்களை அடக்கி ஆளுகின்ற மதம் பிடத்த பிக்குவாகத்தான் செயற்பட்டு வருகின்றார்.

உங்களின் அப்பாவின் காணியா, அம்மாவின் காணியா என கிராம சேவகரிடம் குறித்த புத்த பிக்கு கேட்டிருந்தார். மாறாக  புத்த பிக்குவின் அப்பாவின் காணியா, அரின் அம்மாவின் காணியா, அல்லது சிங்கள இனத்தின் காணியா? என நான் புத்த பிக்குவிடம் கேட்கின்றேன்.

நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல இந்த நாட்டில் ஆதிக் குடிகள், எனவே எங்களிடம் அப்பாவின் காணியா, அம்மாவின் காணியா என கேட்பதற்கு குறித்த புத்த பிக்குவிக்கு என்ன அருகதை இருக்கின்றது. எனவே குறித்த பிக்குவை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடன் அகற்ற வேண்டும் இல்லையேல் இதுபோன்ற போராட்டங்கள் மாவட்டம் பூராகவும் வெடிக்கும் என அவர் தெரிவித்தார்.

 கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம்.

(சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்)

குறித்த பௌத்த மதகுரு 2016 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் ஒரு தடவையும், 2016 ஆம் ஆண்டு பட்டிப்பளை பிரதேச செயலகத்திலும், கடந்த 6 மாத்திற்கு முன்னர் கிராம சேவையாளர் ஒருவரை மறித்து வைத்தது, கடந்தவாரம் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்களைத் தகாத முறையில் திட்டி சட்டத்திற்கு முரணான முறையிலும் நடந்து கொண்ட சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கமும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக வேண்டி நாம் இந்போது போராட்டத்தில் குறித்துள்ளோம் எனவே மத்திய அரசாது இவ்விடையத்தில் துரியகதியில் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம்.
(கொக்கட்டிச்சோலையில் முறைப்பாடு)

குறித்த புத்த பிக்கு அரச நிருவாகத்தை முடக்கியுள்ளார், தமிழ், முஸ்லிம் மக்களை கடுமையாக அவமதித்துப் பேசியிருக்கின்றார். அடிப்பதையும் விட மன உழைச்சலை உண்டு பண்ணக்கூடிய வித்தில் நடந்து கொண்டுள்ளார். இந்த விடையம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கிராம சேவை உத்தியோகஸ்த்தரும், பிரதேச செயலாளரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

மங்களகம பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்வதில் சட்டச் சிக்கல் இடம்பெற்றிருந்தன ஆனாலும் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பணிப்புரையின் போரில் தற்போது கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முற்பாhடு செய்யப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன்.

(புத்த பிக்கு என்ற போர்வையில் நீண்டகாலமாக மிகவும் கேவலமான அராஜகமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றார்.)

புத்த பிக்கு என்ற போர்வையில் நீண்டகாலமாக மிகவும் கேவலமான அராஜகமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றார். கடந்த காலத்தில் ஒரு மின்சார சபை ஊழியரைத் தாக்கியுள்ளார், பொலிஸ் உத்தியோகஸ்த்தரைத் தாக்க முற்பட்டுள்ளார், நல்லாட்சி நடைபெற்றுக் கொணடிருக்கின்ற இக்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது விகாரைக்கு வரவில்லை என்பதற்காக விகாரையில் கட்டப்பட்டிருந்த நினைவுப் படிகத்தை அடித்து உடைத்துள்ளார்.

இலங்கையிலே தூசணம் சொல்பவர்களின் வரிசையில் குறித்த பிக்குதான் முதலாவதாக உள்ளார். எனவே இவ்வாறான செயற்பாடுகளை நாமும் விட்டு வைக்காமல் வேடிக்கை பார்க்காமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பொலிஸ்மா அதிபர், புத்த சாசன அமைச்சர் , எதிர்க் கட்சித்தலைவர், பிரதமர், ஜனாதிபதி, போன்றோருக்கும் அறிவித்துள்ளோம்.

புத்த பிக்குவின் செயற்பாட்டுக்கு பொலிசார் ஒத்துழைப்பு வழங்கியதாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தகாத வார்த்தைப் பிரயோகம் செய்த குறித்த பிக்குவை பொலிசார் அவ்விடத்திலிருந்து கலைத்திரக்க வேண்டும். ஆனால் பொலிசார் அதனை மேற்கொண்டிருக்கவில்லை.
இதனைவிட அண்மையில், பன்குடாவெளி எனுமிடத்திற்கும் சென்ற இக்குறித்த புத்த பிக்கு அங்கு அரச மரம் நிற்கும் காணியைத் தருமாறு குறித்த தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார், அதனைத் தரமாட்டோம் என அவர்கள் மறுத்துள்ளார்கள் இவ்வாறான காடைத்தனமான இந்த புத்த பிக்குவின் செயற்பாட்டைத் தடுத்து, குறித்த புத்த பிக்கு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பட்டிப்பளைப் பிரதேச சிவில் அமைப்பு பிரதிநிதி எஸ்.பரமேஸ்வரநாதன்.

(ஏர்பிடித்து விவசாயம் மேற்கொள்ளும் கைகளில் ஏவுகளைகளை ஏந்துவதற்கு நல்லாட்சி அரசு தமிழினத்தைத் தள்ளக் கூடாது.)


புத்த மதகுரு புத்த மதம் பற்றியும் புத்த மத செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் அராஜக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர் காணி அபகரிப்பதுவும், அராஜகங்களை விளைவிப்பவும், அடிதடிகளில் ஈடுவடுவதுவுமாகவே உள்ளார். இது பௌத்த மதத்திற்கே இழிவான செயற்பாடாகும்.

அவரது தோளிலே உள்ள காவிச் சால்லை எங்கே போகின்றது என்பது தெரியாமல் மது அருந்தியவர்கள் போல் செற்படுகின்றார். படுவான்கரைப் பகுதி விவசாயப்பிரதேசமாகும் ஏர்பிடித்து விவசாயம் மேற்கொள்ளும் கைகளில் ஏவுகளைகளை ஏந்துவதற்கு நல்லாட்சி அரசு தமிழினத்தைத் தள்ளக் கூடாது. எனவே குறித்த பௌத்த மதகுருவின் செயற்பாடு இந்த மாட்டத்தில் இல்லாது கட்டுப்படுத்த வேண்டும். என தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்கிரிதரன்

(மட்டக்களப்பு மாவட்டத்தில் விசாரணை முன்னெடுக்கப்படும்) 

இந்நிலையில் குறித்த பௌத்த மதகுருவித சம்பவம் தொடர்பான விசாரணைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எம்.எஸ்.சாள்ஸ் உறுதி வழங்கியுள்ளதாக இவ்விடத்திற்கு வருதை தந்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்கிரிதரன் தெரிவித்தார் 

SHARE

Author: verified_user

0 Comments: