கடந்த காலத்தில் எமது இளைஞர் யுவதிகள் எமக்காகவும். எமது மக்களுக்காகவும் பல தியாகங்களைச் செய்துள்ளார்கள். அவ்வாறான தியாகங்களுடாகத்தான் தமிழர்களின் பிரச்சனைகள் தற்போது சர்வதேச ரீதியில் எடுத்தியம்பப்படுகின்றன.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் வேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தினால் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்காக வதிவிட தலைமைத்துவப் பயிற்சியின் இறுதிநாள் ஞாயிற்றுக் கிழமை (13) மட்.எருவில் கண்கணகி மகாவித்தியாலயத்தில் பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் இ.வேணுராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
தமிழ் இளைஞர் யுவதிகளை எமது முன்னோர்கள் கடந்த காலங்களில் சகல துறைகளிலும் சிறந்த வீரர்களாக, சிறந்த மேதைகளாக, வளர்திருக்கின்றார்கள் ஏன் நாசா விண்வெளி ஆராய்ச்சியில் கூட எமது பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் விஞ்ஞானியாக மிளிர்கின்றார். எனவே தற்போதைய இளைஞர், யுவதிகளும் சகல துறைகளிலும் வளரவேண்டும், அதக்காக வேண்டி கடின உழைப்பில் இளைஞர் யுவதிகள் ஈடுபட வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் எதிர் கொண்ட யுத்ததினால் எமது உற்றார் உறவினர்களை இழந்தோம், விலை மத்திக்க முடியாத சொத்துக்களை இழந்தோம், ஆனால் நாம் கல்வியை மாத்திரம் இழக்கவில்லை, தமிழினம் தற்போது தலை நிமிர்ந்த நிற்பதங்கு அக்கல்விதான் துணைநிற்கின்றது. எனவே இவருடம் கல்விப் பொதுத்தர சாதரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் பெறுபேறுகளைப் பெற்று எதிர் காலத்தில் சிறந்த தலைவர்களாக, கல்விமான்களாக மிளிர வேண்டும். என அவர் தெரிவித்தார்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலநிதி எம்.கோபாலரெத்தினம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.எம்.என்.நைறூஸ், மற்றும் இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment