14 Nov 2016

மட்டக்களப்பு மற்றும் ஹற்றன் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு பரஸ்பர உடனடி இடமாற்றம்

SHARE
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  மட்டக்களப்பு மற்றும் ஹற்றன் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக இந்த இடமாற்றங்கள் திங்கட்கிழமை முதல் (நொவெம்பெர் 14, 2016) வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக உள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.டி.பி.கே. ஹெற்றியாராச்சி (rp (Chief Inspector and Headquarters Inspector of Police - Batticaloa, CI. M. D. P. K. Hettiarachchi) ஹற்றன் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தற்போது ஹற்றன் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் தயால் டி கஹவத்துர (Chief Inspector and Headquarters Inspector of Police – Dayal De Gahawathura) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: