40 வருடங்களுக்கு மேலாக காணியைப் பராமரித்து வந்தவர்கள் தற்போது அவர்களது காணிகளுக்குள் சென்றால் வன ஜீவராசிகள் திணைககளம், வன பரிபாலச சபையினர், மகாவெலி அபிவிருத்தி சபை, போன்றோர், தடை விதிக்கின்றனர்- கிருஸ்ணபிள்ளை
காணிக்குரிய ஒப்பம் மற்றும், உறுதிப்பத்திரங்கள் அனைத்தும் கடந்த யுத்த காலத்தில் தொலைந்து போயிருகக்கின்ற இந்நிலையில் 40 வருடங்களுக்கு மேலாக காணியைப் பராமரித்து வந்தவர்கள் தற்போது அவர்களது காணிகளுக்குள் சென்று துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வேளையில் வன ஜீவராசிகள் திணைககளம், வன பரிபாலச சபையினர், மகாவெலி அபிவிருத்தி சபை, போன்றோர், தடை வித்திக்கின்றனர். இதனால் எமது மக்கள் பாதிப்படைகின்றார்கள் எனற வேண்டுகோளை நாம் சம்மந்தப்பட்ட அமைச்சரிடமும், திணைக்களத்தினரிடமும், மாகாண சபைக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.
கமத்தொழில் வாரத்தை முன்னிட்டு பழுகாமம் கமநல கேந்திர நிலையம் ஏற்பாடு செய்திருந்த விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வு திங்கட் கிழமை (10) காந்திபுரம் எனும் கிராமத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிர் விதைகளை வழங்கிவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் இங்கு குறிப்பிடுகையில்….
விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகளிகளின் பணிகள் பாராட்டத்தக்கது. அதுபோல் இத்துறை சார்ந்த அதிகாரிகளின் அறிவுரைகளால் விவசாயத்தில் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்ற படுவான்கரைப் பகுதி விவசாயம் மேலோங்கச் செய்ய வேண்டும். விவசாயிகள் தன்னிறைவு காண்பதாயின் அது விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகளின் கைகளிலே தங்கியுள்ளது. அதுபோல் விவசாயிகளும் நன்றியுணர்வோடு செயற்பட வேண்டும். இப்பகுதியில் நில வளம், நீர் வளம் இருந்தாலும் காணிகள் செப்பனிடப்படுவது குறைவாகும். அனைவரும் வேளாண்மை செய்கின்றார்கள் என்ற நோக்கோடு விவசாயம் செய்யாமல் குறுகிய நிலப்பரப்பில் கூடிய வருமானம் பெறக் கூடிய வித்தில் மேட்டுநிலப் பயிர் செய்கைகளையும், வேளாண்மைச் செய்கையினையும் மேற்கொண்டு தன்னிறைவு காண வேண்டும்.
மலையகம், மற்றும், அனுரதபுரம், போன்ற பகுதியில் 2 தொடக்கம் 3 ஏக்கர் நிலப்பரப்புத்தான் ஒருவருக்கு விவசாயம் செய்யும் காணி காணப்படுகின்றது. இவ்வாறு இருந்தும் அவர்கள் விவசாயத்தில் தன்னிறைவு காண்கின்றார்கள். ஆனால் இப்பகுதியில் 5 தொடக்கம் 100 ஏக்கர் வரைக்கும் ஒருவருக்கு விவசாயம் மேற்கொள்ளும் காணி இருந்தும் விவசாயத்தில் தன்னிறைவு காண முடியாதுள்ளது. எனவே சித்தித்து திறனுடன் எமது பகுதி விவசாயிகள் செயற்பட வேண்டியுள்ளது.
அனைத்து விடையங்களிலும் நாம் திறமையானவர்களயிந்தாலும் கடந்த 30 வருட யுத்த காலத்தில் நாம் பல பின்னடைவுகளைச் சநத்தித்திருக்கின்றோம். இருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் வந்தத்தின் பின்னர் சில மாற்றங்கள் தென் படுகின்றன இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் இழந்த இழப்புக்களை மீழப் பெற முடியாவிட்டாலும், முடிந்தவற்றை தமிழ் தலைவர்கள், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்த பெற்றெடுக்க வேண்டும்.
காணிக்குரிய ஒப்பம் மற்றும், உறுதிப்பத்திரங்கள் அனைத்தும் கடந்த யுத்த காலத்தில் தொலைந்து போயிருகக்கின்ற இந்நிலையில் 40 வருடங்களுக்கு மேலாக காணியைப் பராமரித்து வந்தவர்கள் தற்போது அவர்களது காணிகளுக்குள் சென்று துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வேளையில் வன ஜீவராசிகள் திணைககளம், வன பரிபாலச சபையினர், மகாவெலி அபிவிருத்தி சபை, போன்றோர், தடை வித்திக்கின்றனர். இதனால் எமது மக்கள் பாதிப்படைகின்றார்கள் எனற வேண்டுகோளை நாம் சம்மந்தப்பட்ட அமைச்சரிடமும், திணைக்களத்தினரிடமும், மாகாண சபைக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் பழுகாமம் நமநல கேந்திர நிலைய பெரும்பாக உத்தியோகஸ்தர் எம்.பாயிஸ் உட்பட, விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment