பட்டிருப்பு தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தி தற்போதைய நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இல்லாத நிலையில், பட்டிருப்புத் தொகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்று தற்போது தேசிய
ரீதியில் விளையாடச் செல்கின்றார்கள். இவற்றால் இலங்கையிலே பட்டிருப்புத் தொகுதியின் பெயர் தேசியரீதியில் பேசப்படும் என்பதோடு, இத்தொகுயின் அடையாளமும் கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.
என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் வீர வீராங்கணைகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் விளையாட்டுச் சீருடைகள் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் திங்கட் கிழமை (10) மாலை அவ்வமைப்பின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. சீருடைகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
மாணவர்கள், மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றோர் தங்களது திறமைகளை வெளிக் கொணர்ந்து பதக்கங்களைப் பெறும் போது அவர்களைப் பாராட்டுவதற்கு பலரும் முன் வருவார்கள். மாறாக அவர்களை ஊக்கப் படுத்துவதற்கு முன் வருபவர்கள் மிகக் குறைவு. இதனை நிவர்தி செய்யும் முகமாகவே எமது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு விளையாட்டு, கல்வி, போன்ற பலவற்றில் திறமையுடன் செயற்படுபவர்களை அடையளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றோம்.
பட்டிருப்புக் கல்வி வலயத்திலிருந்து இம்முறை தேசிய ரீதியில் நடைபெறும் விளையாட்டில் பங்குபற்றும் மாணவர்களின் தொகையை அடுத்த வருடம் அதிகரிக்கச் செய்ய வேண்டும். இவற்றுக்கு எமது அமைப்பு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கக் காத்திருக்கின்றது. உடல் , உள ரீதியான பயிற்சிகள், போசாக்கான உணவு வகைகள், மேலதிகள பயிற்சிகள், குறைபாடாகவுள்ள விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல குறைபாடுகளை நிவர்தி செய்யவும், தொடர்ந்து இப்பகுதி மாணவர்களின் நன்மை கருத்தி எமது அமைப்பு இவ்வாறான உதவிகளை நல்லவும் காத்திருக்கின்றது.
இராசாமாணிக்கம் மக்கள் அமைப்பு 100 வருடங்களுக்கான சமூக சேவைசெய்யும் தூர நோக்குச் சிந்தனையுடன்தான் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மக்களிடத்தில் காணப்படும் தேவைகளை எமது அமைப்புக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் நாம் அவற்றை நேரில் சென்று அவதானித்து விட்டு அவற்றுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், வாழ்வாதார ரீதியான உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம்.
எதிர்காலத்தில் சிறந்ததொரு கற்ற சமூகம் உருவாக்கப் பெற்றால் அனைவரும் சுயமாக வாழ்வாதார ரீதியில் முன்நேற்றம் பெறுவார்கள் அப்போது எமது அமைப்பால் மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறைவடையும். இந்நிலையில் தற்போதைய நிலையில் எமது அமைப்பின் உதவிகள் தேவைப்படுபவர்களை எம்மோடு தொடர்பு படுத்தி விடுங்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment