மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஹிதாயத் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் (ஒக்ரோபெர் 11, 2016) கைக்குண்டுகள் இரண்டை தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிதாயத் நகரிலுள்ள செய்யது இப்றாஹிம் ஹமிர் முஹம்மத் என்பவரின் வளவிலேயே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வளவுரிமையாளர் தனது வளவைத் துப்பரவு செய்து வேலி அமைத்துக் கொண்டிருந்த போது இந்தக் குண்டுகள் மண்ணுக்குள் தென்பட்டவுடன் அது குறித்து அவர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த புலனாய்வாளர்களும் பொலிஸாரும் குண்டுகளை மீட்டு அதனைச் செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புழக்கத்தில் இருந்த கையெறி குண்டுகள் வகையைச் சேர்ந்தவை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment