மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணியில் வியாழக்கிழமை
(06) காலை
இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட 04 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில்> வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனது வீட்டுக்கு முன்பாக பூ பறித்துக்கொண்டிருந்த பெண் மீது 03 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்துள்ள 04 பேரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தும்பங்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த த.தேவிகா (வயது 54)> மற்றும் களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த
த.மயூரன் (வயது 25)> ம.பிரதீபன் (வயது 24)> க.அபிஸன் (வயது 17) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துத் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையி கடந்த செவ்வாய்க் கிழமை தும்பங்கேணியில்
இடம்பெற்ற விபத்தில் களுமுந்தன்வெளியைச் சேர்ந்த சிவராசா என்பவர் படுகாயமடைந்த நிலையில்
வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment