(டிலா)
ஏறாவூர் ஐயங்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையுடன் இணைந்த கைத்தொழில் பேட்டையை (1) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, எம்.எஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம். நசீர், கே. துரைராஜசிங்கம், ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசாங்க அதிகாரிகள், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment