1 Apr 2016

சுயாதீன ஊடகவியலாளர்களை பக்கச் சார்பானவர்கள் என ஊடக முகவர்கள் குற்றம் சுமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

SHARE
ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நடு நிலையானவர்கள், அவர்கள் கட்சி மதம், போன்ற வற்றுக்கு அப்பால் சென்று செயற்படுபவர்கள்.
இப்பாற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரச தரப்பு அரசயில் வாதிகளும், எதிர்த் தரப்பு அரசியல் வாதிகளும், அவர்களுடைய செய்திகளையும், புகைப்படங்களையும், அறிக்கைகளையும், அனுப்புவது வழக்கம். இவற்றினை ஊடகவியலாளர்கள் தமக்கு வேண்டியதை மாத்திரம் அவர்கள் சார்ந்த ஊடகங்களுக்கு அனுப்புவதில்லை. யார் எந்த  அரசியல் வாதிகளோ அல்லது பொது அமைப்புக்களோ அல்லது எந்த சமூகத்தினரோ என்று பார்க்காமல் செய்திகளை அவர்கள் சார்ந்த ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க இப்படிப்பட்ட நடுநிலமையுடன் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்களை, ஒரு பக்கச்சாரார், அல்லது ஒரு குறித்த அரசியல்வாதியின் ஊடக இணைப்பாளர், என வேண்டத்தகாத முறையில் குற்றம் சுமத்தி, சில இணையத் தளங்களுக்கு மாத்திரம், தகவல்களை வழங்கிகக் கொண்டு தாங்களும், இச்சமூகத்தில் ஊடகவியலாளர்கள் என அடையாளம் காட்டுவதற்கு முனைந்து, முகவர்களாகச் செயற்படுபவர்கள் கூறிவருவதாக சுயாதீன ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் வாதிகளும், ஏன் தனியார் அமைப்புக்களும், தங்களுக்கு ஏற்றாற்போல் தனிப்பட்ட முறையில் ஊடக இணைப்பாளர்களை நியமித்து வைத்து செயற்படுகின்றார்கள். அது அவர்களின் சொந்த ஊடக இணைப்பாளர்களாகவோ, அல்லது ஊடகச் செயலாளர்களாக செயலாளர்களாகவேதான் செயற்படுவார்கள், மாறாக ஏனைய செய்திகளில் அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அக்கறை செலுத்த மாட்டார்கள்.

ஆனால் ஊடகம் என்றால் என்ன? ஊடகவியலாளர்கள் யார்? அது தொடர்பான போதிய அறிவின்மையுடைய சிலர் சில இணையத்தளங்களுக்கு, தகவல்களை வழங்கிக் கொண்டு நேர்மையுடனும், சுயாதீனமாகவும் செயற்படும் சுதந்திர ஊடகவியலாளர்களை முத்திரை குத்தி விமர்சிப்பதானது இணையத்தளங்களு அவ்வாறு ஊடக முகவர்களாக செயற்படுபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்விடையம்குறித்து குறித்த நபர்கள் தொடர்பான நடத்தைகள் தொடர்பிலும், அவர்கள் ஊடகவியலாளர்களை அவதூறாக பரப்பிவரும் கருத்துக்கள் தொடர்பிலும், அவர்கள் முகவர்களாக செயற்பட்டு வரும், இணையத்தளங்களுக்கும், மற்றும், ஊடக சங்கங்களுக்கும், முறைப்பாடுகளை சுயாதீன ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். 

இப்படிப்பட்டவர்களை சமூகத்திற்குக் காட்டுவதற்காக வேண்டி, அவர்களின் ஒலிப்பதிவு, புகைப்படம், அவர்கள் ஊடக முகவர்களாகச் செயற்படும், இணையத்தளங்களின் பெயர்கள் என்பனவும், விரைவில் வெளியிடப்படும். 


SHARE

Author: verified_user

0 Comments: