(க.விஜி)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள "மிகவும் பழமையான பொதுச்சந்தை கட்டிடத்தொகுதி" நாளாந்தம் உடைந்து விழுகின்றது.
சுமார் 69 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இக்கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகும்.இக்கட்டிடத்தொகுதி கிராமத்தின் மக்களின் வியாபாரத்தை நிவத்தி செய்யும் நோக்கில் சந்தையாக கட்டப்பட்டது.
இக்கட்டிடம் அப்போதைய கலாசார அமைச்சராக இருந்த செல்லையா இராதுரையின் முயற்சியால் கிராமத்தின் ஒற்றுமைப்பட்ட மக்களின் தேவைக்காக வழங்கப்பட்டதாகும்.
இதில் மரக்கறி வகைகள்,மீன்வகைகள் விற்பனை நடைபெற்று வந்தது.காலப்போக்கில் துறைநீலாவணை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் முயற்சியினால் இக்கட்டிடத்தில் கல்விநிலையமாக மாற்றப்பட்டு கல்வி நடவடிக்கைககள் முன்னேடுக்கப்பட்டது. இதனால் துறைநீலாவணை கிராமத்தின் கல்வி செழிப்பாக வளர்ந்தது. அத்துடன் கட்டிடத்தில் நகைக்கடை,சலூன்,கூட்டுறவுக்கடை என்பன வியாபாரக்கடைகளாக காணப்படுகின்றது.
கூரைகள்,கூரைஓடுகள், கைமரங்கள்,கட்டிடங்கள் என்பன மிகவும் பழுதடைந்த நிலையி லும், மழை ஒழுகும் நிலையில் இக்கட்டிடங்கள் காணப்படுகின்றது.
இவ்வாளாகம் பற்றைக் காடுகள், நிறைந்து
காட்டாக்காலிகளின் உறைவிடமாக காட்சிதருகின்றது. தூர்ந்துபோன நிலையில் காணப்படும் இக்கட்டிடத்தை புனரமைப்பு செய்வதற்கு கிராமத்தில் உள்ள சங்கங்கள், சபைகள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவேண்டும். என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment