6 Apr 2016

துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து

SHARE
மட்டக்களப்பு மாவட்டம்மகிழடித்தீவிலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு செல்லும்  பிரதான வீதியில் மீனாட்சிமரத்தடியில்
 துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மோதுண்டு விபத்தான சம்பவம் செவ்வாய்க் கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் துவிச்சக்கரவண்டிமோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் பயணம் செய்த இருவரும் காயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: