மாணவர்களின் ஆக்கங்கள் நிரம்பிய தளிர் சஞ்சிகை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை (05) இரவு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
எழுதளிர் அமைப்பினால் வருடாந்தம் வெளியீடப்படும் தளிரின் மூன்றாவது இதழே இதன்போது வெளியீடப்பட்டது.
மாணவர்களின் எழுத்தாற்றலுக்கு களம் அமைக்கும் வகையில் இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளதுடன் மாணவர்களின் தேவைக்கு ஏற்ற வகையிலும் விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தளிரின் முதல் பிரதி நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி குருக்கள் பெற்றுக் கொண்டார். அதன் பின் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரதிகள் வழங்கப்பட்டது.
இதன்போது மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.
நாகசக்தி கலை மன்றத்தின் தலைவர் இ.குகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி, நாகலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலனசபை தலைவர் க.தியாகராசா, எழுதளிர் அமைப்பின் ஆலோசகர் செ.மேகநாதன், உறுப்பினர்களான ம.குகநாதன், மௌனகுரு, சுந்தரலிங்கம், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment