
(டிலா)
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி கண்டி மாவட்ட மாகாண உறுப்பினர் அசாத் சாலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சின்ஹவிடம் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி கையளித்த போதிலும் கட்சியினால் மாகாண சபைக்கு அறிவிக்கப்படாமையினாலேயே தான் இன்று மாகாண சபைக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும்தெரிவித்துள்ளதுடன் இதற்கான பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment