8 Mar 2016

மட்டு. அரச அதிபரின் முயற்சியால் இந்திய நிதியில் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப்பிரிவு

SHARE
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசின் நிதி உதவியுடன் சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் விடுதியுடனான கட்டடத் தொகுதி 275 மில்லியன் புதிதாக அமைக்கப்படவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

 இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த திட்டமிடல் பணிப்பாளர்,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்திய உயர்ஸ்தானிகருக்கு 2014ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்த சத்திர சிகிக்சைக் கூடத்துடனான விடுதி உள்ளிட்ட கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.

போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாக இருந்த சத்திர சிகிச்சைப்பிரிவுக்கான கோரிக்கை அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டு அனைத்து நடடிவக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இந்தியப்பாராளுமன்றத்தினால் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் சிறிய அபிவிருத்தித்திட்ட நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைவாக இதற்கான அவணங்கள் அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டது.

5 தளம், அடித்தளம் ஆகியவற்றைக் கொண்ட இந்த சத்திர சிகிச்சைப்பிரிவு கட்டத் தொகுதியில், அடித்தளம், சேர்ஜிகல் கிளினிக் (சத்திர சிகிச்சை கிளினிக்), என்டோஸ் கோபி (கருவி உட்செலுத்தி பரிசோதித்தல் பிரிவு) , சேர்ஜிகல் ரேடியோலொஜி பிரிவு (சத்திர சிகிச்சை கதிரியக்கவியல் பிரிவு), றெஸ்ஸிங் பிரிவு (மருத்துவ சிகிச்சை- மருந்திடல் பிரிவு) ஆகியன அமையவுள்ளன. முதலாவது தளத்தில் 10 நோயாளிகளைப் பராமரிக்கக் கூடிய அதிதீவிர சிகிச்சைப்பிரிவு, 3 சத்திர சிகிச்சிசைக் கூடங்களும் அமைய வுள்ளன.

2 தொடக்கம் 5ஆவது தளம் வரை 4 தளங்களிலும், 160 பேர் தங்கிச் சிகிச்சை பெறக்கூடிய நோயாளர் விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

இந்திய அரசின் நிதி உதவியில் அமையவுள்ள இந்த சத்திர சிகிச்சைப்பிரிவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் அனைவரும் பயன்பெறுவர் என்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் என்றும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: