
களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்திற்கு முன்னதாக பொறுப்பற்ற விதத்தில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பை ஆரேக்கியமற்ற சூழலை உருவாக்கும் என பிரயாணிகளும், பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடையம் தொடர்பில் அவர்கள் மேலும் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில். ஒரு பாடசாலையின் முன்பு இவ்வாறு குப்பை காணப்படுவதனால் அவ்விடத்தில் கால்நடைகள் தங்கி நிற்கும் இடமாக மாறுதற்கு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு அதுமாத்திரமின்றி குப்பைகளை கிளறி இடத்தினை அசிங்கப்படுத்தியும் நிற்கின்றது. இது பாடசாலை சுகாதார ஆரோக்கியத்திற்கு பொருத்தமானதல்ல.
இன்னும் சில தினங்கள் இவ்விடத்தில் குப்பை கொட்டப்படுமாயின் வீதியால் பிரயாணம் செய்ய முடியாத நிலையும் ஏற்படும் அவ்வாறு வீதியருகில் கூடுதலான குப்பைகளை சேகரிப்பது சட்டத்திற்கும் முரணானது
எனவே மாணவர்களினதும், பிரயாணிகளினதும், நன்மைகருதி குப்பையை அகற்ற சம்மந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக பிரயாணிகளும், பொதுமக்களும்,கருத்து தெரிவிக்கின்றனர்…..
0 Comments:
Post a Comment