
மட்க்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தளவில் விளையாட்டு கழகங்கள் குழு விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை சுவட்டு நிகழ்வுகளுக்கு கொடுப்பதில்லை இந் நிலமை மாறவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அவர்கள் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுககீட்டின் ஊடாக விiளாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.
அவர் தெடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
மட்டக்களப்பில் இருந்து தேசியமட்டத்திற்கு தெரிவாகி செல்லும் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையம் ஒன்றினை மட்டக்களப்பில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாகாண சபையில் விடுத்திரிக்கின்றோம். பயிற்சி மையங்கள் இல்லாத நிலையிலும்; சில கழகங்கள் விளையாட்டு பயியிற்களை அளித்து வருகின்றது பாராட்டுக்குரியது. இருந்து சில கழகங்கள் அடிப்படை வசதியினைக் கூட இல்லாமல் இருப்பதனை நான் அறிவேன் அரசியல் நிலையில் தற்போது ஒரு நல்ல சூழல் தென்படுவதாக அறியக் கூடயதாகவுள்ளது இதனை வைத்து இவ்வாறான சில வேலைகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும.
கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளரின் கவனத்திற்கு பிரதேச ரீதியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த போது நிதிப் பற்றாக்கு நிலவவுதாக அறிவிக்கின்றனர். இருந்தும் இதனை வருங்காலங்களில் மத்திய அமைச்சின் உதவியுடன் நிவர்த்தி செய்யலாம் என எதிர்பார்க்கின்றேன் நீங்கள் தேசிய மட்டத்துடன் நின்றுவிடாது சர்வதேச ரீதியில் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். குழு விளையாட்டுக்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதனை விடுத்து ஏனைய சுவட்டு நிகழ்வுகளுக்கு நீங்கள் தயாராக வேண்டும் என தெரிவித்தார்
0 Comments:
Post a Comment