மட்டக்களப்பு பழுகாமம் இந்து கலா மன்றத்தின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் அறநெறி பாடசாலை பொங்கல் விழாவும் நேற்று விலானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத்நந்தலால் மற்றும் கிராமத்தின் சங்கங்களைச் சார்ந்த பிரதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கலாபூசணம் தணிகாசலத்தின் தலைமையில் கவியரங்கு நடைபெற்றது அறநெறி பரீட்சைகளில் சித்தி எய்திய மாணவர்களுக்கு பரீசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்
0 Comments:
Post a Comment