கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு சபை முதல்வர் சந்திர தாஷ கலபதி தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கில் முதலிட்டு கிழக்கை அபிவிருத்தி செய்வோம் என்னும் நோக்கில் எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து தொடராக மூன்று நாட்கள் இடம்பெறவிருக்கும் உலக மாநாட்டை தலைமையேற்று நடாத்தவிருப்பதால் சபைக்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
அதனால் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு பதில் முதலமைச்சராக கிழக்கு மகாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முகம்மட் நஸீரை நியமித்துள்ளதாக கிழக்கு மகாணசபைத் தகவல்கல் தெரிவிக்கின்றன
அத்துடன் நாளைய சபை அமர்வில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் ஆரிப் சம்சுதீன் ஆகியோரின் பிரேரணையும் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment