மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையில் தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரம் ஆரம்ப நிகழ்வு திங்கட் கிழமை (25) பிரதேச சபைச் செயலாளர் திருமதி.யாகேஸ்வரி வசந்தகுமாரன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நடைபெற்றது.
இந்த தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரம் ஆரம்ப நிகழ்வில், பிரதேச சபையின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், நூலகர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நாடு பூராகவும் நடைமுறைப் படுத்தப்படும் இத்திட்டம் ஒரு வார காலத்திற்கு தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில், அனைத்து அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment