மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தென்றல் எனும் காலண்டு சஞ்சிகை கடந்த 3 மாத காலமாக வெளிவரவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இச்சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான நான் கடந்த 31.10.2015 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின்போது பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றேன். இதன் காரணமாகத்தான் தென்றல் காலண்டு சஞ்சிகை வெளிவராமலுள்ளது என்பதை வாசகர்களுக்கு கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். என தென்றல் காலாண்டு சஞ்சிகையின், பிரதம ஆசியரியர், க.கிருபாகரன் இன்று வெள்ளிக் கிழமை (29) தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
தென்றல் சஞ்சிகை வெளிவராததையிட்டு வாசகர்களும், நேயர்களும், எழுத்தாளர்கள் உட்பட பலரும் பல அழைப்புக்களை எற்படுத்திய வண்ணமுள்ளார்கள். இக்குறுகிய கால இடைவெளிக்குள் தென்றலின் வருகை இல்லாததையிட்டு மிகவும் மனம் வபருந்துகின்றேன். இருந்த போதிலும் மிகவிரைவில் தொடர்ச்சியாக தடங்கலின்றி தொன்றலை ஸ்பரிசம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனத் தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க கடந்த 31.10.2015 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின்போது படுகாயடைந்த தென்றல் காலாடு சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தொடர்ந்து 2 மாதகாலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மட்டக்களப்பு கல்லடியிலுள்ள, அவரது வீட்டில் நடக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றார்.
கால் ஒன்று உடைந்த நிலையிலுள்ள அவரை ஒருவருட காலத்திற்கு ஓய்வெடும்மாறும் வைத்திய ஆலோசனை வளங்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment