கொக்கட்டிச்சோலை படுகொலையினால் தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்து கட்சிதமாக முடித்துள்ளது. கொக்கட்டிச்சோலை படுகொலை போன்று வாகரை, வெருகல், மற்றும், முள்ளிவாய்க்காலில் 14000 தமிழர்கள், குருநகர் கடல், நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்திலிருந்த பாடசாலைச் சிறார்கள், நாகர் கோயில், போன்ற இடங்களிலிருந்த தமிழர்களை சிங்கள அரசு கொத்துக் கொத்தாய் கொன்று குவித்தது. அப்போதெல்லாம் தமிழினம் மெல்ல மெல்ல வளர்ந்தது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக் கிழமை (28) பிற்பகல், கொக்கட்டிச்சோலை காலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு “மறந்தாலும் மண்ணும் இரையாகும்” எனும் தலைப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
தமிழர்கள் கொன்று குவிக்கும்போது ஏன் அப்படி செய்கின்றீர்கள் என கதறிக் கத்தினேன் உண்மையில் அப்போது தமிழர்களுக்கு ஒரு பெரும் தவறு நடந்திருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாறதுங்க தற்போதுதான் தெரிவிக்கின்றார்.
ஈழ விடுதலை எனும் பெரிய நெருப்பாற்று நீச்சலிலே தமிழ் மக்கள் 3 லெட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இந்த மண்ணிலே பலி கொடுத்திருக்கின்றோம். 60000 மேற்பட்ட போராளிகளை இழந்திருக்கின்றோம்.
உலகத்திலே விடுதலைக்காகப் போராடி தன்னுடைய இன அளவிற்கு மேலாக இழப்பைச் சந்தித்த இனம் என்றால் அது தமிழினம்தான். உலகத்திலே தோன்றிய பல இனங்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன, பல இலங்கள் இல்லாமலேயே போயிருக்கின்றன அவ்வாறுதான் எமது தமிழினமும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வந்துள்ளது.
கடந்த யுத்த காலத்தில் இராணுவத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டவர்கள் கூட இன்று இல்லை. இந்த நாட்டின் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல் போனவர்களைக் கட்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மக்களிடம் சென்று கேட்டதெல்லம் ஆடு தரவா, மாடு தரவா, காணமல் போனவர்களுக்கு மரணச்சான்று தரவா என்றுதான். கேட்டார்களே தவிர காணாமல் போன எம்உறவுகளுக்கு என்ன நீதீ வேண்டும் என்று கேட்கவில்லை.
தற்போது இலங்கை அரசு பொறுப்புச்சொல்ல வேண்டிய ஒரு காலத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. சர்வதேச நீதிபதிகளின் வருகையைத் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அண்மையில் சனல்4 ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இது காலப்பரிமாணத்திற்குள் நாம் அடைந்துள்ள சிறிய வெற்றியாகும். இதனை நாம் சரியாகக் கைக்கொள்ளத் தவறினால் அரசு இதனை மூடிமறைக்கும்.
இக்காலமானது குருசேத்திரப் போருக்குச் சமமாகும், இக்காலத்தில் அரசியல் ரீதியில், இராஜ தந்திர வீயூகங்களும், தந்திரோபாயங்களும், சறுக்கல்களை அடைந்து பின்வாங்கினால், “மறந்தாலும் மண்ணும் இரையாகும்” மறந்தும் மண்ணும் வாழ்வும் இல்லாமலே போகும், சூழலுக்குள் நாங்கள் தள்ளப்படுவோம்.
ஈராக் மீது சதாம் குசைன் 140 பேரைப் படுகொலை செய்தார் என்பதற்காக அமெரிக்கா சதாம்குசைனுக்கு மரணதண்டனை வழங்கியளது. ஆனால் கொக்கட்டிச்சோலை, நாகர்கோயில், மகிழடித்தீவு, குருநகர், நவாலி தேவாலயம், நாகர்கோயில், போன்ற இடங்களில் எம்மினம் கொல்லப்பட்டபோது எமக்காகப்பேச யாரும் இருக்கவில்லை.
வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும், எமது இனம் கொத்துக்கொத்தாக் கொன்றளிக்கும் போதுதான் உலகம் எம்மைத் திரும்பிப் பார்த்தது. அந்த அழிப்பிற்குப் பின்னர்தான் எமது பக்க நியாயங்களை உலகம் ஏற்றுக் கொண்டது.
ஆயுத ரீதியான ஓடுபாதையில் நாம் தோற்கடிக்கப் பட்டோம் என்பது ஏற்க முடியாத உண்மை, ஆனால் அரசியல் ரீதியாக நாம் தற்போது ஒரு பலமாக இருக்கின்றோம்.
புலம்பெயர் உறவுகளினதும், தமிழ் நாட்டு தொப்புள் கொடி உறவுகளினதும் ஒத்தாசையோடு எமது அரசியல் பயணத்தை சீராக மேற்கொள்ள வேண்டும், இதில் நாம் சறுக்கலுக்குட்படுவோமாக இருந்தல் இந்த பூமி பந்தில் அடையாளம் இல்லாமல் ஆக்கப்படுவோம். இன்றும் தமிழர்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன. எனவே நாம் ஒரு கட்டமைக்கப் பட்ட இனை அழிப்புக்குள் மெல்ல மெல்லத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இக்காலகட்டத்தில் தமிழர்களைப் பல்வேறு கோணங்களில் உடைத்து பிரிவினைகளை மெல்லவே உருவாக்கின்ற செயற்பாடுகளையும், அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழர் முதலமைச்சராக வராக் கூடாது என்பதில் அரசின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வரைக்கும் மிகவும் கவனமாகவிருந்தார்கள். மன்னார், வவனியா போன்ற இடங்களில்கூட தமிழர்களை அரசாங்க அதிபராக நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்த தயாரில்லை. அரசியல் கைத்திகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஜப்பானில் போய் சொல்கிறார் அரசியல் கைத்திகள் என யாரும் இல்லை என்று இவைகளை வைத்துப் பார்க்கின்றபோது முரண்பாடான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இதன்போதுதான் தமிழ் மக்களிடத்தில் குளம்பம் வருகின்றன் பேரினவாத சிந்தனையுடன் இருப்பவர்கள் எமக்கு ஒரு தீர்வைத் தருவார்களா, வடக்கு கிழக்கு இணைந்ததாக அதுவும் சமஸ்டி முறையில் அத்தீர்வு கிடைக்குமா? காணி, பெரிஸ் அதிகாரம், வெளிநாட்டு நிதிகளைக் கையாள் கின்ற அதிகாரம் போன்றனவெல்லாம் எமக்குக் கிடைக்குமா, இவ்வாறான அதிகூடிய நியாயமான சந்தேகங்களோடு எமது மக்கள் உள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment