மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக் கிழமை (28) பிற்பகல் கொக்கட்டிச்சோலை காலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் மேற்குப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், ச.வியாளேந்திரன், சீ.யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, பா.அரிநேத்திரன் பொதுமக்கள், என பலரும் காலந்து கொண்டிருந்தனர்.
மேலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் பங்கு பற்றியிருந்தனர்.
கடந்த 1987 ஆம் ஆண்டு 01.28 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைச் சந்தியில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது இறந்தவர்களின் உறவினர்கள், இங்கு கலந்து கொண்டு நினைவுச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் “மறந்தலும் மண்ணும் இரையாகும்” எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார்.
0 Comments:
Post a Comment