6 Jan 2016

பல நெருக்கு வாரங்களுக்கிடையில்தான் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கின்றது - அமைச்சர் துரைராசசிங்கம்

SHARE
தற்போது தெற்கில் சிங்களப் பெரும்பாண்மையின மக்களின் உணர்வைத் தூண்டுகின்ற விதத்தில் செயற்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. எமது தேசியத் தலைவர் சொல்வது போல நெருக்குவாரங்களுக்கிடையில் தான் இவ்வாறான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கின்றது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோவில் போரதீவில் திங்கட் கிழமை (04) இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

மக்களின் தலைவர்களாக இருக்கின்ற நாங்கள் எங்களுடைய செயலினுடைய பொருள் உணர்ந்து செயற்பட வேண்டும். தற்போது கிழக்கில் இரண்டு மாகாண அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமை என்கின்ற ரீதியிலெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமை அமைந்திருக்கின்றது.

தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வருகின்ற அனைத்து உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ற செய்தியோடு செல்லுகின்ற போது நாங்கள் மிகப் பெரிய பங்குபற்றுதலை இந்த அரசியற் திட்டத்தை ஆக்கலாம்.

எதிர் வருகின்ற 09 ஆம் திகதி நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக அமைக்கப்படப் போகின்றது. அந்த அரசியல் நிர்ணய சபையில் எமது அரசியற் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஆராயப்பட விருக்கின்றது. வரலாற்றிற்கு மாறாக வரலாற்றுத் தடத்தை மாற்றி திட்டமிட்ட படி இப்போது பிறந்திருக்கின்ற புத்தாண்N;டாடு சேர்த்து நாடாளுமன்;றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி இந்த நாட்டுக்கு அரசியல் அமைப்பை ஆக்குகின்ற செயற்பாட்டுக்கு இந்த அரசு முன்வந்திருக்கின்றது.

புதிய அரசியல் அமைப்பு என்பது பெரும்பாண்மையின மக்களுக்குத் தேவையானது அல்ல. இது தமிழர்களுக்கு நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த ஒன்று. எனவே தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையிலே தான் இந்த அரசியல் நிர்ணய சபை ஆக்கப்படுகின்றது. இந்த அரசியல் அமைப்பு நமக்காக ஆக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கப்படுகின்ற போது அதில் நாம் இதுவரையில் தொடர்ச்சியாக வைத்த கோரிக்கைகளை யதார்த்த அடிப்படையில் நாம் முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

டொனமூர் சட்டம் வந்த போதும் எமக்கு பூரண சுயாட்சி வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தார்கள் அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் அன்று அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் பிரதிநிதித்துவம் இன்றி எமது உரிமையை இழந்தோம், எமது குரலை இழந்தோம். 

பின்னர் எங்களுக்கென்று பல தீர்வுத் திட்டங்கள் வந்தன ஆகக் கடைசியாக வந்தது என்று 13வது திருத்தச் சட்டத்தைச் சொல்லலாம். இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது ஆனால் அந்த ஒப்பந்தம் குறைபாடுடையது என்று எமது தலைவர்கள் சொன்னார்கள். அதனையும் வேண்டாம் என்று தூக்கியெறிந்து விட்டோம்.

அதன் பின்னர் ஏற்பட்ட கொடூரமான செயற்பாடுகளின் காரணமாக நாம் எவ்வளவு சொத்;துக்களை இழந்திருக்கின்றோம். எங்களுடைய சந்ததியையே இழந்திருக்கின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தில் நாங்கள் மக்கட் தொகை அடிப்படையில் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம் என்றால் 1987ம் ஆண்டு வந்த அந்த வாய்ப்பினை பயன்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வந்த வாய்ப்பினைப் பயன்படுத்தியிருந்தால் இந்த இழப்புகள் எமக்கு ஏற்பட்டிருக்குமா என்பதைப் பற்றி நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1994ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியற் பேச்சுவர்த்தை தமிழர்களின் அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்ற போது வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லீம்கள் தொடர்பாகவும் ஒரு இணக்கப்பாடு தேவை என்கின்ற ஒரு முக்கியத்துவம் உண்டு இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். இது முத்தரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தது. இதன்போது ஒற்றையாட்சி முறை நீக்கி பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற ஒரு தீர்வுத் திட்டம் ஆக்கப்பட்டது. அந்தத் தீர்வுத் திட்டத்தைக் கூட எங்களால் செயற்படுத்த முடியாமல் போய்விட்டது. 

பேரின மக்கள், முஸ்லீம் மக்கள், இவர்கள் அனைவருடனும் சேர்ந்து தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பெற்றெடுக்க வேண்டும் என்கின்ற அவசியத்தோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

இவ்வாறு இருக்கின்ற போது சிலர் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவை என்கின்ற ஒன்றை ஆரம்பித்து தமிழ் மக்களுக்கான அரசியல் அமைப்புத் தீர்வுத் திட்டம் பற்றி வரைபு ஒன்று செய்வதற்கு புறப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் யாரையும் வேண்டுமென்று குறை சொல்ல வில்லை. ஆனால் யதார்த்தத்தைச் சொல்லித் தான் ஆக வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும் மக்கள் இட்ட ஆணையைச் சரியாகக் கடைப்பிடித்திருக்கின்றேனா என. சிந்திக்க வேண்டும். இப்போது அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கு புறப்பட்டிருக்கின்றார். பல்கலைக்கழகப் பேராசிரோ அல்லது வெளிநாட்டு நிபுனர்களோ அரசியலமைப்பை ஆக்க முடியும். ஆனால் அவை நடைமுறைக்கு ஒத்தவையாக இருக்க முடியாது.

இந்த அரசியற் தீர்வுத் திட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முறையில் நடந்து கொள்ளவில்லை எனச் சிலர் கூறுகின்றார்கள். இது முற்றிலும் பொய்யான ஒரு செய்தி. எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் சரி இந்தத் தீர்வுத் திட்டம் தொடர்பில் கருத்துரைகள் நடந்தாலும் சரி இவையனைத்தையும் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவில் நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம் அதே போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் அந்த செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆனால் யதார்த்த ரீதயிலான நடைமுறை அறிந்த தலைமை எமக்கு இருக்கின்றது. அவரின் பின்னால் செல்வோம் அதன் மூலம் 2016ல் முன்னர் குறிப்பிட்டது போல் வெவ்வேறு இனத்தவரும் வாக்களிக்கக் கூடிய விதத்தில் ஒரு சிறந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆக்குவதற்கு நாம் பங்களிப்போம். எமது மக்களும் வெறும் ஓசைகளுக்கு காது கொடுக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் ஒன்றித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: