6 Jan 2016

நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின் வெட்டு

SHARE

இலங்கை மின்சார சபையின் பராமாரிப்பு பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பலபகுதிகளில் நான்கு தினங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன. மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை இதனை தெரிவித்துள்ளது. 

மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு, 

07.01.2016 ம் திகதி காலை 10.00 – 12.00 மணிவரை வரை நாவலடி, புனானை, வாகனேரி, ரிதிதென்ன, ஜயந்தியாய, மயிலந்தென்னை ஆகிய இடங்கள். 

07.01.2016 காலை 09.00 முதல் மாலை 5.00 மணி வரை சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, செங்கலடி, ஏறாவூர் ஆகிய இடங்கள். 

08.01.2016 காலை 09.00 முதல் மாலை 5.00 மணி வரை கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய இடங்கள். 

09.01.2016 காலை 09.00 முதல் மாலை 5.00 மணி வரை பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி – 01, லேக் வீதி – 02 ஆகிய இடங்களில் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: