கோட்டைகல்லாறு பாலர் பாடசாலையின் ஆசிரியரின் வேண்டுகோளிற்கிணங்க கிழக்கின் இளைஞர்முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடலின் கீள் முன்னணியின் கோட்டைக்கால்லாறு கிளை உறுப்பினர்களால்
செவ்வாய்க் கிழமை (05) கோட்டைகல்லாறு பாலர் பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச் சிரமதானத்தில் முன்னணியின் கோட்டைக்கால்லாறு கிளை உறுப்பினர்கள் செயற்பட்டு பாலர் பாடசாலையின் சுற்றுச்சூழல் மாணவர்கள் கல்வி கற்பதற்குரிய வகையில் மாற்றப்பட்டதுடன் பாதுகாப்பானதாகவும் மாற்றப்பட்டிருந்தது. பாலர் பாடசாலை ஆசிரியர் கள் முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிற்கு நன்றிகளை இதன்போது தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment