சகல பிரதேசங்களுக்கும் நாம் வேறுபாடுகள் காட்டாது உதவுவதற்கு மாவட்ட நிருவாகம் என்றும் தயாராக இருக்கின்றது. அரசியல் பேவறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாகச் செயற்பட்டால் நிட்சயமாக இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை மிக விரைவாக செய்து முடிக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனையின்கீழுள்ள போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சாதனையாளர் பாராட்டுவிழா வியாழக்கிழமை (08) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் போரதீவுப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்பேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கiயில்..
போரதீவுப்பற்று பிரதேசம் கல்வி, நிருவாகம் சார் மற்றும் ஏனைய பல்துறைசார்ந்த பிரச்சனைகளேடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாட்டத்திலே பட்டிருப்புத தொகுதி தனித்துவமான ஒரு பண்பையும், கலாசாரத்தினாலும் வரலாற்றினாலும், தனித்துவமான ஒரு பண்பைக்கொண்டு காணப்படுகின்றது. இந்த தொகுதியானது தமிழர்களின் பால் பற்றுறுதி மிக்கதாகவும், அடையாளப்படுத்தப் பட்டுக் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த போரதீவுப் பற்றுபிரதேசமும் காணப்பட்டாலும் கடந்த 30 வருடகால யுத்தம் இப்பகுதி மக்களிடையே அழிக்கமுடியாத அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளது.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் சேவைகளை ஆற்றுவதற்கு மாட்ட நிருவாகத்திற்கு இப்பிரதேசத்திற்குள்ளேயே பல தடைகள் இருக்கின்றன. மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்று தலைமைத்துவத்துக்குக் கிழ் செயற்படுத்துவதற்குரிய பிரதேச நிருவாகத்தை எம்மால் அடையாளப்படுத்த முடியவில்லை.
இப்பிரதேசத்தில் கடமை புரிவரும் அதிகாரிகள், சேவையாற்ற முடியாமலும், மக்களோடு ஒரு இணைந்த மாவட்ட செயலகத்தினூடான ஒரு பிரதேச நிருவாகத்தோடு கடமையாற்ற முடியாமலிருப்பதும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலiமாகும்.
இவ்வாறான துர்ப்பாக்கிய நிலமையினை தீர்ப்பதற்கு முனைகின்ற போதெல்லாம், வீண்கதைகளைக் கட்டி, அரசியல் செல்லாக்குகளைப் பிரயோகித்து மாட்ட நிருவாத்தைச் சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரதேச நிருவாகத்தை நான் கொண்டிருக்பின்றேன். இதன் காரணமாகத்தான் இப்குதிக்கு எம்மால் பலn சேவைகள் மேற்கொள்ள முடியாமலிருக்கின்றது.
ஏனைய பிரதேசங்களிலிலிருந்து நாம் பல அடைவுகளைப் பற்றுக் கொள்கின்ற போதிலும் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கீடு, மற்றும், வேலைத் திட்டங்களைப் பூர்தி செய்வதிலும், சவாலை எதிர் கொண்டிருக்கின்றோம். தவறான பிரச்சாரத்தின் மூலம் இப்பகுதி மக்களின் தேவைகளும், அவற்றிக்கான அடைவுகளும் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அனைத்து சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
இந்த மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராம மக்கள் எதிர் கொள்ளும் அனர்த்தங்கள், ஆரம்பப் பாடசாலை, பாலர் பாடசாலை, கிராமங்களை நகரங்களோடு இணைத்தல், போன்ற பல விடையங்கள் தொடர்பில் உலகவங்கியுடன் கலந்துரையாடியுள்ளேன். இவற்றுள், மக்களை அனர்தங்களிலிருந்து பாதுகாத்தல், மற்றும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற திட்டங்களை மேற்கொள்வதற்கு உலக வங்கி விரும்பம் கொண்டுள்ளது.
எனவே சகல பிரதேசங்களுக்கும் நாம் வேறுபாடுகள் காட்டாது உதவுவதற்கு மாவட்ட நிருவாகம் என்றும் தயாராக இருக்கின்றது. அரசியல் பேவறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாகச் செயற்பட்டால் நிட்சயமாக இந்த மாவட்டத்தின் அகபிவிருத்தியை மிக விரைவாக செய்து முடிக்கலாம் என எதிர் பார்கின்றேன். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment