கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக அரசாங்க நியமனம் வழங்குமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் இன்று காலை 11.30 மணியளவில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31க்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணசபையினால் வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உண்ணாவிரமிருக்கும் பட்டதாரிகளிடம் எடுத்துக்கூறி கலைந்து செல்லுமாறிய கூறியதைத் தொடர்ந்து பட்டதாரிகள் இன்று ஒரு மணியளவில் உண்ணாவிரதத்தை முடித்துச்சென்றனர்.
குறிப்பிட்ட இடத்திற்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரை ராஜசிங்கம் மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்ன துரைரட்ணம் நடராஸா ஆகியோரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி சாள்ஸ் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
0 Comments:
Post a Comment