சட்ட விரோதமாகக் போத்தல்களில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மதுபானம் வியாழக் கிழமை மாலை (08) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
களுவாஞ்சிகுடியிலிருந்து கல்முனைக்கு கார் ஒன்றில் சட்ட விரோதமான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருந்த மதுபானப் போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப் பட்டுள்ளன.
இவற்றுள் காற்போத்தல் 150உம், அரைப்போத்தல் 48உம், ஒருபோத்தல் 60உம், கைப்பற்றப்பட்டன.
பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இம்மதுபானப் போத்தல் களும் அவற்றைக் கொண்டுசென்ற காரும் கைப்பற்றப் பட்டுள்ளதோடு இவற்றைக் கொண்டு சென்ற சந்தேக நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தரவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன்களான (44138), ஆதம்பாவா, பந்துல (44294) மற்றும் பொலிஸ கொஸ்தாம்பலகளான, ஆரியவம்ச (35274), அத்தநாயக்க (22478), வெலியங்க (37228) , சந்துருவன் (67160), பண்டார (60211) ஆகிய குழுவினரே இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிரபெத்ததந்திரி, ஆகியோரின் ஆலசனைகளுக்கமைய, இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானங்களை திங்கள் கிழமை களுவாஞ்சிகு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த வுள்ளதாக களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தர தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment