6 Oct 2015

நெல் களஞ்சியசாலை காட்டு யானையினால் தகர்ப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தும்பங்கேணியில்  அமைந்துள்ள நெல்களஞ்சிய சாலையை செவ்வாய்க் கிழமை (06) அதிகாலை தாக்கி உடைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமாக தும்பங்கேணியில் அமைந்துள் நெற்களஞ்சியசாலையில் 450 மெற்றிக்தொண் நெல் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. இதில் செவ்வாய்க் கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த தனியன் காட்டுயானை ஒன்று சுற்று வேலியை உடைத்துள்ளதுடன் நெற்களஞ்சியசாலையின் கதவையும் உடைது நெல்மூட்டைகளை இழுத்துச் சென்றுள்ளதாக அதன் காவலாளி தெரிவித்தார்.

இதனால் சுமார் ஒரு லெட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து பெலிசார், மற்றும், தமது தலைமைக் காரியாலயத்திற்கும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கும் முடையிட்டுள்ளதாக நெல் சந்தைப் படுத்தும் சபையின் இப்பிரதேச அபிவிருத்தி உத்தி உத்தியோகஸ்தர் செ.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

இக்களஞ்சிய சாலையின் சுற்றுவேலியை ஏற்கனவே இரண்டு தடவைகள் இவ்வாறு காட்டு யானை தாக்கிய உடைத்தள்ளமை குறிப்பிடத் தக்கதாககும்.

போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள காட்டு யானைகளை அப்புறப்படுத்துமாறு கோரி திங்கட் கிழமை (05) போரதீவுப்பற்று – வெல்லாவெளியில் காலை 8 மணிமுதல் 5 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும், குறிப்பிடத்தக்கதாகும








SHARE

Author: verified_user

0 Comments: