6 Oct 2015

சிறுவர் கார்னிவல் களியாட்ட நிகழ்வு

SHARE
(இ.சுதா)

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு கல்முனை மரிய தேரேசியா சர்வ சிறுவர் பாலர் பாடசாலை ஏற்பாடுசெய்துள்ள கார்னிவல் களியாட்ட நிகழ்வு எதிர்வரும் 9 ஆம்திகதி முதல் 11 ஆம் திகதி வரையான மூன்று தினங்களிலும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையும் பிரதான நிகழ்வுகளும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகே மற்றும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது சிறுவர் விளையாட்டுக்கள் மற்றும் சிறுவர் ஆக்கங்கள், விளையாட்டுப் பொருட்கள் சிறுவர்களின் பாடல்கள், நடன நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: