6 Oct 2015

முத்தான வியர்வை எனும் தொணிப்பொருளிலான வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்கட்சி

SHARE
திவிநெகும திணைக்களம் நடாத்தும் முத்தான வியர்வை எனும் தொணிப்பொருளிலான வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்ணகாட்சி செவ்வாய் கிழமை (06) மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று  பிரதேசத்தின் தும்பங்கேணியில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச வாழ்வின் எழுச்சி திணைக்கள போரதீவுப்பற்று பிரதேச முகாமையாளர் க.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெத்தினம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை, போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வி.ஆர்.மகேந்திரன், மற்றும், போரதீவுப்பற்று பிரதேச கருத்திட்ட உதவியாளர் எஸ்.நவரெத்தினம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 10 லெட்சம் ரூபாய் பெறுமதியில் 10 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்திற்குரிய பொருட்களும், தெரிவு செய்யப்பட்ட 59 பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களும், வழங்கப்பட்டன.

இவ்வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்காட்சியில் உள்ளுர் மற்றும், வெளியூர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டதோடு, இப்பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 
























SHARE

Author: verified_user

0 Comments: