
(இ.சுதா)
கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு கல்வி அமைச்சு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையுள்ள தினங்களை பாடசாலை மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப் படுத்தியுள்ளது.
இது தொடர்பான விபரங்கள் அடங்கிய சுற்று நிருபங்கள் பாடசாலைகளுக்கு
வழங்கப்பட்டுள்ளமையினை முன்னிட்டு மாபெரும் சிரமதான நிகழ்வு திங்கட் கிழமை (07) பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சி.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நதிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பாடசாலை வழாகத்தை சிரமதானம் மூலம் துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment