8 Sept 2015

கைக் குண்டு மீட்பு

SHARE
மட்டக்களப்பு பாரதி லேன் 3ஆம் குறுக்கில் துருப்பிடித்த நிலையில் உள்ள கைக்குண்டொன்றை திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியில் வசிக்கும் இராமசாமி இராமசிவம் என்பவரது வீட்டின் எல்லைச் சுவருக்கு வெளியில் சீமெந்து கலவை கொண்ட அடிப்பாகத் துண்டின் உட்பகுதியில் குறித்த குண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெளிவீதியில் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது குறித்த கொங்கிறீட் கலவைத் துண்டை மறுபுறம் திருப்பியபோது குண்டை அவதானித்துள்ளார். குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: