8 Sept 2015

பெரும்போக வேளாண்மைச் செய்கை தொடர்பான ஆரம்பக் கூட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்தின், 2015 – 2016 ஆம் அண்டுக்கான பெரும்போக் வேளாண்மைச் செய்கை தொடர்பான ஆரம்பக் கூட்டம் இன்று திங்கட் கிழமை (07) போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, மற்றும், மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், ஞா.கிருஷ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், மற்றும்,  போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள் அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்களத்தின், அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், உரச் செயலக உதவிப் பணிப்பாளர், கால்நடை வைத்திய அதிகாரி,  விவசாயிகள். என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, விவசாயத்துக்கான நீர் வினியோகம், விதை நெல், உரமானியம், வினியோகம், விவசாயிகளுக்கான காப்புறுதிகள், விவிசாயிகள் எதிர் கொள்ளும், யானைத்தாக்கம் மற்றும் கால்நடைகளின் தாக்கம், போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

மேலும், இவ்வருடத்தில், போரதீவுப்பற்று பிரதேசத்தில் 17116 ஏக்கர் வயல் நிலத்தில் வேளாண்மை செய்கை பண்ணுதல்,  எதிர் வரும் 15.09.2015 அன்று வயல் வேலைகள் ஆரம்பித்தல், எதிரிவரும், 25.10.0215 அன்று இவ்வருடத்திற்றாக விதைப்பு வேலைகள் ஆரம்பித்தல், இப்பகுதியிலுள்ள கால்நடைகள் அனைத்தும் மேச்சல் தரைப்பகுதிக்கு எதிர்வரும் 15.09.2015 ஆம் திகதிக்கு முன்னர் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படது.

செப்டம்பர் மாத்திற்குள், உரமானியம் பெறும் விவசாயிகள் தங்களது பெயர் விபரங்களை உரிய கமநல அமைப்பு ஊடாக உரச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தல், 

இவ்வரும் இப்பிரதேச்தில், 500 ஏக்கரில் உப உணவுப் பயிர்களான நிலக்கடலை, சோளன், கௌபி போன்ற உப உணவு பயிர்களை மேற்கொள்ளுதல்.

வேளாண்மையில் எற்படும் பாரிய நோயாகக் காணப்படும் கபிலநிறத்தத்தி எனும் நோய்க்கு விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே தடவையில் கிருமி நாசினிகளை விசிறுதல், 

நெல் அறுவடை செய்த உடனேயே விவிசாயிகளிடமிருந்து நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்தல்.

வேளாண்மைகளை நாசம் செய்யும், காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தல்.

விதை நெல் உற்பத்தி செய்யும் விவசாகளை ஊக்குவித்தல், போன்ன பல தீர்மானங்களும் இதன்போது எடுக்கபட்படமை குறிப்பிடத் தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: