சிறுபான்மை சமூகங்களின் குரலாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் திகழ்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்டமை முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியாகவுள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களையும் இரா.சம்பந்தன் அரவணைத்து அவர்களையும் கணக்கில் எடுப்பார் என்ற நம்பிக்கை உண்டு' என்றார். சமூக ஐக்கியத்தையும்; இன நல்லுறவையும் வளர்க்கவும் சந்தேகங்களை களைந்து ஒற்றுமையுடன் வாழவும் நாட்டில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை ஏற்படவும் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழிவகுக்கும் என்று நம்புகின்றேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
'மேலும், சாணாக்கியம் மிக்க அரசியல் தலைவராக இரா.சம்பந்தன் உள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஆரம்பித்தால், அவரின் உரையை அனைவரும் அவதானத்துடன் செவிமடுப்பர்.
அவரின் உரையில் நிதானம், சமூக, இன ஐக்கியம் காணப்படும். அவர் இனத்துவேச கருத்துக்களை பேசுவதில்லை. தனது சமூகத்துக்கான தேவையின் நியாயத்தையும் சிறுபான்மை சமூகங்களின் தேவையையும் அவர் சிலாகித்துப் பேசுவார். இதனாலேயே அவரின் உரை அனைவருக்கும் பிடிக்கும்' எனவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment