20 Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இருப்பை எந்த கட்சியாலும் வேறு யாராலும் எதுவும் செய்ய முடியாது

SHARE
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மறைவுக்கு பின்னர் 15 வருடங்களாக பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளோம் என நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள எம்.ஐ.எம்.மன்சூர் நேற்று (19) இரவு சவளக்கடை –மத்தியமுகாம் மத்தியகுழு உறுப்பினர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 'பிரதான பாத்திரம் வகித்த அதிகமான அரசியல் பிரமுகர்கள் கட்சியில் இருந்து வெளியேறி கட்சியின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இன்று இந்த தேர்தலில் இல்லாமல் போயிருக்கின்றார்கள்.
புதிதாக இந்த அம்பாரை மாவட்டத்தில் வந்திருந்தவர்களை இந்த கட்சி போராளிகள் ஒன்றிணைந்து முறியடித்து இருக்கின்றார்கள். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  இருப்பை எந்த கட்சியாலும் வேறு யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களையும் சில கட்சிகளினுடைய தலைமைத்துவம் கேட்டுக் கெண்டதற்கிணங்க அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் அதிலும் ஒரு சாரார் பிரிந்து இருந்தாலும் ஏனைய அனைவரும் ஒன்று சேர்ந்து மிக கடுமையாக இரவு பகல் பாராது வெற்றிக்காக உழைத்து வெற்றியை உறுதி செய்தார்கள் அந்த வகையில் சகல வெளியூர் மக்கள் விசேடமாக பாராட்டப்பட வேண்டும். 

அவர்கள் எமது மூன்று பேருடைய வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்துள்ளர்கள.; அவர்கள் அனைவரையும், குறிப்பாக ஆச்சரியத்தக்க வகையில் இந்த முறை வாக்களித்த சம்மாந்துறை அத்துடன் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்' என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: