3 Aug 2015

ஆலையடிவேம்பில் யானை இறப்பு

SHARE

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலிகம்பை கிராம அலுவலர் பிரிவில்; சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இறந்துள்ளது.
இந்த நிலையில், இறந்த யானையை அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் வனஜீவராசிகள் திணைக்களத்தின்  அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டனர்.

இந்த யானைக்கு அதன் வாய்ப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உணவை உட்கொள்ளவோ,  நீரை அருந்தவோ முடியாதவாறு நடமாடியது. இந்த நிலையிலேயே இந்த யானை இறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக  அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய அதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் வனஜீவராசிகள் வலயத்தினுள் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியினுள் எட்டு யானைகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: