3 Aug 2015

மட்டக்களப்பில் சாரணர் பயிற்சி முகாம்

SHARE

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நேற்றுமுன்தினம் (01) மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் பி.பி.ஆனந்தராஜா, முன்னாள் ஆணையாளரும் சர்வதேச சாரண அமைப்பாளருமான எஸ்.தேவராஜன் ஆகியோர் பிரதம அதிதியகளாகக் கலந்து கொண்டனர்.
 
உதவி ஆணையாளர் பி. சரிகுமாரின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி முகாமில், சிறப்பு அதிதிகளாக பயிற்சி ஆணையாளர் எம்.உதயகுமார், உதவி ஆணையாளர்களான வி.பிரதீபன், ஆர்.பாஸ்கரன், ஐ.கிறிஸ்ரி, வி.பத்மநாதன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
மட்டக்களப்பு சாரண சங்கத்தின், மட்டக்களப்பு வலயத்தினுடைய ஏற்பாட்டில் நடைபெறும் இப் பயிற்சி முகாமில் புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, மஹாஜனா கல்லூரி, புனித சிசிலியா பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம், நாவலடி நாமகள் வித்தியாலயம், புனித திரேசா வித்தியாலயம், அமிர்தகழி விநாயகர் வித்தியாலயம், வை..எம்.சீ. ஏ திறந்த குழு ஆகியவற்றின் 150க்கும் மேற்பட்ட ஆண், பெண் சாரணர்கள் பங்கு கொண்டனர்.
 
இப் பயிற்சி முகாமில், பயிற்சிகளை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி குழுச் சாரணத் தலைவர் எம்.நரேந்திரன் வழங்கினார்.
 
 பாடசாலைகளின் சாரண ஆசிரியர்கள், சாரணத் தலைவர்கள், அருட் சகோதரிகளும் இப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
 
SHARE

Author: verified_user

0 Comments: