தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் உரிமையையும் அபிலாஷைகளையும் வென்;றெடுக்கும். வேறு எந்தக் கட்சியாலும் இவற்றை  நிறைவேற்றமுடியாது என்று சர்வதேசம் அறிந்துகொள்ள எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி  நடைபெறும் தேர்தல் களமாக அமையப்போகின்றது என்று   மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்  கோ.கருணாகரம் தெரிவித்தார்.
 துறைநீலாவணையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நடைபெறப்போகும் பொதுத்தேர்தல் வட,கிழக்கு மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல்.
தமிழர் பிரதிநிதித்துவத்தை மட்டக்களப்பில் குறைத்து வேற்று இனத்தவருக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்காக பல சக்திகள் எங்கள் மத்தியில் ஊடுருவி இருக்கின்றன. இலங்கையிலே நடைபெறும் இந்த பொதுத்தேர்தலில் ஆகக் கூடுதலான கட்சிகளும் குழுக்களும் போட்டியிடும் மாவட்டமாக மட்டக்களப்பு இருக்கின்றது' என்றார் 

0 Comments:
Post a Comment